நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (31) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
அதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவும் கலந்துகொண்டார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்ளை அடையாளம் கண்டு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் அன்றி நாட்டில் நிவாரணம் தேவைப்படுகின்ற அனைவரையும் அடையாளம் கண்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றும் அவர் மேலும் குறிப்பட்டார்.