முடிந்தால் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதால், இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்பதனை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் என்ன என்று தேர்வு செய்யாமல் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சில தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் வெளிநாட்டில் குடியேற முடியாமல் போய்விடும் என சிலர் நினைக்கின்றார்கள். முதலில் நாங்கள் உயிர் வாழ வேண்டும். அதன் பின்னரே வெளிநாடுகள் பற்றி சிந்திக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் தடுப்பூசிகளின் வகைகளை தெரிவு செய்துக் கொண்டிருப்பது பொருத்தமில்லாத ஒரு செயலாகும் என இராஜங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.