நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.ஆகவே அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கடந்த நான்கு நாட்களில் முறையே 34, 62, 75 மற்றும் 57 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் நாளாந்தம் 10 முதல் 20 வரையான வழக்குகள் மட்டுமே பதிவாகியதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.