நாட்டில் கறவை மாடுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிலிருந்து கறவை மாடுகளை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சு ரீதியாக கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
அம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் கால்நடைகளுக்கு புல் நிலம் இல்லாததால் எருமைகள் மற்றும் மாடுகளை சரணாலயங்கள் மற்றும் யால, வில்பத்து, லுணுகம்வெஹர, உடவளவ, கபிலித்த போன்ற காப்புக்காடுகளுக்கு விடுவித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், காடுகளில் உள்ள செடிகளை கால்நடைகள் உண்பதால், மற்ற வன விலங்குகளுக்குத் தேவையான உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பக்க விளைவாக, காட்டு யானைகளின் தாக்குதலும் அதிகரித்துள்ளது.
தற்போது கறவை மாடுகள் பற்றாக்குறையால் கால்நடை சபைக்கு தினமும் கிடைக்கும் பாலின் அளவு குறைந்து வருகிறது. மேலும் பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து கறவை மாடுகளின் விற்பனையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கறவை மாடுகளைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தை ஓரளவு வெற்றியடைந்ததாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.