நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் மேற்படி ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரொன் தொற்றார்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
எனவே முடிந்தவரை மிக விரைவாக செயலூக்கி தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கோரியுள்ளார்.