நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டன.
இந்நிலையில் குறிப்பாக ஆப்பிள் பழங்களின் விலைகள் தற்போது சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு, நாரத்தை போன்ற பல வகையான பழங்களின் விலைகளும் குறைந்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் உள்ளூர் வியாபாரிகள் வழங்கும் வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களின் விலை இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.