செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை திருத்தம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அரச உயர் அதிகாரி ஒருவர் ”எரிபொருள் மற்றும் எரிவாயு விலை செப்டம்பர் மாதம் வரை மாறாமல் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றை நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,