நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.