நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இன்று நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
இது மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று நான் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி நாம் பேச வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கும் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.