நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியே காரணம் எனவும், சந்தையில் உதிரிப் பாகங்களின் விலை கூட வேகமாக உயர்ந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலைமை காரணமாக தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
உதிரிப் பாகங்கள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு பகுதி பயணிகள் பேருந்து துறை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஒட்டுமொத்த போக்கு வரத்து துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்