நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலை மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராகவும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் நாடாளுமன்றத்திற்கு அருகில் பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இடம்பெற்று வருகின்ற நிலையில் பொலிசார் மற்றும் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவலகள் தெரிவிக்கின்றன