நாடளாவிய ரீதியில் 51% ஆகும். வறண்ட பிரதேசம் முழுவதும் யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளின் பற்றாக்குறையும் காரணமாகும் என வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வறண்ட பிரதேசம் முழுவதும் யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருப்பதாகவும், யானை மற்றும் மனித உயிர் இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் அவர் கூறினார்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து யானை – மனித மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய தலைவர், இடம்பெற்று வரும் இவ்வாறான செயல்களுக்கு அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.