அமெரிக்கா நிறுவனத்திற்கு கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை விற்க இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தமானது சனிக்கிழமை (18) அதிகாலை 12.06 மணிக்கு கையெழுத்தானது.
அதிகாலை 2 மணியளவில் அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளியேறினர், அதன் பிறகு ஜனாதிபதி அமெரிக்காவிற்கு பறந்தார் “என்று ஜேவிபி தலைவர் எம்பி அனுரகுமார திசாநாயக்க கூறினார்.
கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் 350 மெகாவோட் மின்உற்பத்தி திட்டத்தின் தற்போதைய உரிமையாளரான வெஸ்ட் கோஸ்ட் நிறுவனத்தின் பங்குகளில், திறைசேரிக்கு சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மின்உற்பத்தி நிலையத்தின் இயற்கை வாயு மிதக்கும் களஞ்சியசாலை, குழாய் கட்டமைப்பை நிர்மாணித்தல், நிர்வகித்தல் என்பவற்றிற்கு குறித்த நிறுவனத்திற்ககு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை பத்திரம் கடந்த 6ஆம் திகதி அனுமதிக்கப்படும் போது எந்தவொரு அமைச்சரிடமும் அந்த பத்திரம் இருக்கவில்லை. அவர்கள் பார்த்திருக்கவுமில்லை. ஆனால் அமைச்சரவை அங்கீகரிக்கிறது.
இவ்வா பங்குகளை விற்பனை செய்தல் மற்றும் கொள்வனவு செ்ய்வதற்காக ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர், அதை அனுமதிக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கையொப்பமிட்ட பின்னர் எதற்காக அனுமதிக்கிறார்கள்.
இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு பின்னர் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் அந்த வெள்ளையர் அதிகாலை 2 மணிக்கு விமானத்தில் அமெரிக்கா செல்கிறார். அதன்பின் கோட்டாபய அமெரிக்கா செல்கிறார். அதுவே நடந்தது.
இந்த நாட்டில் இரவு 12 மணிக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இவர்கள் என்ன ஆந்தைகளா? இப்பொழுது என்ன நடக்கிறது? அணுசக்தி துறையின் உரிமையாளரே நாளை இந்த நாட்டின் அரசாங்கத்தை தீர்மானிப்பார்.
இதை சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம். இதை ஆய்வுக்குட்படுத்த சட்டத்தரணிகள் குழுவிடம் கையளித்துள்ளோம் என்றார்