இலங்கையின் அரசுக்கு சொந்தமான மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிறுவனமான ‘லங்கா சதொச’ எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல வகையான அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி இன்றையதினம் (0-04-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளன.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.
ஒரு கிலோ வௌ்ளைபூடு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபாவாகும்.
ஒரு கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
மேலும், சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்கவும் லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.