இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று நள்ளிரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது வடக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களைக் கோரியுள்ளது.