அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமைக்கு எதிராக நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளை ஒன்றில் ஒரு கிலோ சீனி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது
அதன் பிரகாரம் அவர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.