பாணந்துறையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவே இக் கொடூர செயல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இளைஞன் ஒருவர் வாளால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவியவந்துள்ளது.
அத்தோடு தாக்குதலுக்குள்ளான இளைஞன் காயங்களுடன் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கு ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளி அந்த இடத்திற்குள் நுழைந்து அந்த இளைஞனை வாளால் தாக்கிய விதம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
அத்தோடு இந்த இளைஞன் தலையில் பலமுறை அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.