கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நொரிகா தர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது “முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் தற்போது சுமார் 9,000 குழந்தைகள் நன்னடத்தை மையங்களில் உள்ளனர்,” எனவும் அவர் கூறினார்.
அத்துடன் நன்னடத்தை மையங்களில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து கேட்கப்பட்டபோது, “தேசியத் திணைக்களமாக, எங்களுக்கு முறைப்பாடு கிடைத்தால், அதை விசாரிக்கும் திறன் உள்ளது,” எனவும் பதிலளித்தார்.
மேலும், “மேற்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுவர் அபிவிருத்தி மையங்கள் உள்ளன எனவும் எனவே, பெரும்பாலான குழந்தைகள் மேற்கு மாகாணத்தில் உள்ளனர்,” எனவும் அவர் தெரிவித்தார்.