இலங்கைக்கு 500 மெட்ரிக் தொன்(50,000 பொதிகள்) அரிசி வழங்கபட்டுள்ளது.
இதனை சீனா நன்கொடையாக வழங்கி உள்ளது.
குறித்த அரிசி நேற்று (4) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தேவைப்படும் மாணவர்களுக்கு இந்தத் தொகுதி விநியோகிக்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் பாடசாலைகளுக்கு 6,000 மெட்ரிக் தொன் (600,000 பொதிகள்) அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.