இலங்கையில், சராசரியாக 9 இலட்சம் குடும்பங்கள் அன்றாட உணவை பெற்றுக்கொள்ளக் கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர், வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருக்கும் 17 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில், 9 இலட்சம் குடும்பங்கள் ஒரு வேளை உணவு அல்லது இரண்டு வேளை உணவு மாத்திரம் உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் உள்ள 9 இலட்சத்து 35 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்களில் 2 இலட்சத்து 80 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார நெருக்கடியால் 20 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.