தெல்தெனிய, ரஜவெல்ல பகுதியில் வைத்து தோட்டாக்கள் உட்பட சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவல பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் அமெரிக்க பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.