பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை தொழில் ஆணையாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு சட்ட ரீதியாக சவால் விடுக்கப்படும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.