கொழும்பு – பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிலகிரிய அவன்யூ பகுதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பொன்றின் 7 ஆவது மாடியில் இருந்து விழுந்தமையினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயதான ஜெயானந்தன் வேலு அம்மா மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.