பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள ´ஓல் செயின்ட்ஸ்´ தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.