குற்றச்சாட்டுகள் மற்றும் அவமதிப்புகள் இருந்தாலும்கூட, இரசாயன உரங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை விலக்கிக்கொள்ளாமல் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக கரிம உர உற்பத்தி தொடர்பான இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
பதுளை மாவட்ட விவசாயிகளுக்கு கரிம உரத்தை வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கரிம உரததை உற்பத்திக்காக பயன்படுத்தும் தீர்மானம், பொதுமக்களின் நலன்கருதி எடுக்கப்பட்டதே, தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. இருப்பினும் தேர்தல் ஒன்றின் தோல்விக்கும் அது ஒரு காரணமாக அமையலாம் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்