தெமோதர ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினைத் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி தெமோதர ஒன்பது வளைவுப் பாலத்தை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.