பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட இதனை தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தை மையமாக கொண்டு நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 450 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.