தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாத்தறை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் பின்னதுவயில் இருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
பின்னதுவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.