இலங்கையில் உணவுப் பணவீக்கம் கடந்த மாதத்தில் 30.2% வீதமாக உயர்ந்துள்ள நிலையில், உணவுப் பணவீக்கத்தில் தெற்காசியாவில் இலங்கை முதாலவது இடத்தில் உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையின்படி, உணவு அல்லாத பணவீக்கம் 13.4% ஆக உள்ளது. மார்ச் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் பணவீக்கம் 18.7% ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் இலங்கையில் உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 25.7% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 10.1% ஆகவும் இருந்தன.
மேலும் உணவுப் பணவீக்கத்தின் படி, இலங்கை உலகில் 12ஆவது இடத்திலும், ஆசியாவில் 4ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 1ஆவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.