காலி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை – பொனதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரின் வீட்டின் மீதே இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை பல தோட்டாக்கள் தாக்கியுள்ளதுடன், சம்பவத்தின் போது சமன்கொல்லாவின் தாயும் மூன்று சகோதரிகளும் உடனிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.