காப்புறுதி நிறுவனங்கள் துவிச்சக்கர வண்டிகளுக்கு காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குள் கொள்வனவு செய்த துவிச்சக்கர வண்டிகள்
துவிச்சக்கர வண்டிகளுக்கு காப்புறுதி:சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்
துவிச்சக்கர வண்டிகளுக்கு தற்போது விற்பனை சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளதால், இந்த காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இரண்டு வருட காலத்திற்குள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டிகளுக்கு இந்த காப்புறுதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு, துவிச்சக்கர வண்டி பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்தால், முழு பெறுமதியும் செலுத்தப்படும்.
துவிச்சக்கர வண்டி களவாடப்பட்டால், முழுமையான பெறுமதியை காப்புறுதி நிறுவனங்களிடம் இருந்து அறவிட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
காப்புறுதி நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறவிக்கவில்லை
துவிச்சக்கர வண்டிகளுக்கு காப்புறுதி:சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்
எது எப்படி இருந்த போதிலும் காப்புறுதி நிறுவனங்கள் இந்த விடயம் சம்பந்தமாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில், பலர் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் அவற்றின் விலைகள் மற்றும் தேவை அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி வர்த்தகர்கள் தெரிவித்திருந்தனர்.