யாழ்ப்பாணம் மணிக்கட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் முத்துகிருஸ்ணா அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து கிருஸ்ணா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராஜா இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா, மனோசன், யக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விதுசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
நிலாகுமாரி, அதர்வா, அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஜெயகுமார், சித்திரகுமார்(கொழும்பு), காலஞ்சென்ற நளினி, சிவகுமார்(லண்டன்), நிர்மலா(பிரான்ஸ்), றேனுசா(பிரான்ஸ்), சுமதி(இலங்கை), பிரேமலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணநேசராசா(கனடா), இலட்சுமிதேவி(இலங்கை), காலஞ்சென்ற சகுந்தலா, றஞ்சினிதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.