யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் மனோன்மணி அவர்கள் 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, தெய்வானம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஸ்வலிங்கம்(சுந்தரம்- New Star Mill, மல்லாவி) அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பிகாநிதி, சுசிலாதேவி, சந்திராதேவி, கருணாநிதி, சாந்தினிதேவி, ஈஸ்வரன், மாலினிதேவி, அமுதா, ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற தயாநிதி, விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, விசாலாட்சி, அபிராமிப்பிள்ளை, சண்முகம்பிள்ளை, அம்பலவாணர், நல்லதம்பி, சுந்தரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, முத்தய்யா, பிள்ளையம்மா, அப்புத்துரை ஆகியோரின் மைத்துனியும்,
விஜேந்தினி, பாலசிங்கம், கனகரட்ணம், சக்தி, மகாலிங்கம், வதனி, ஜெயா, ஜெனா, மகேந்திரகுமார், ரவிக்குமார், துஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.