மன்னார் இலுப்பைக்கடவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவில், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிறேமதாஸ் நாகேஸ்வி அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
பிறேமதாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுஜிதா அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
நகுலேஸ்வரி, சண்முகநாதன், மகேந்திரன், சசிகரன் ஆகயோரின் பாசமிகு சகோதரியும்,
நாகேந்திரன், சோமலதா, தயாநிதி, சுபாஜினி, சீதா, மாதா, முருகதாஸ், ஐயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புவிதா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு சித்தியும், பிரியந்தி, சயந்தி, ருஜந்தன், கிருஷன், சஸ்வின், ஜஸ்வின் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.