யாழ். மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியபுத்திரன் தவமணி அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சூரியபுத்திரன் அவர்களின் அருமை மனைவியும்,
வித்தயானந்தன்(ஆனந்), சர்மிலா, மேகானந்தன்(நந்தன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுஷ்கா, பிரபா, கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெஷிக்கா, தியா, அயான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
ஆரவி அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
பிருந்தாவனநாதன், சண்முகநாதன், புஷ்பராணி, சோதிநாதன், காலஞ்சென்ற கேதீஸ்வரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்னம்மா, இராஜராஜேஸ்வரி, சிவநேசன், குலமணிதேவி, காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியசீலி, பாக்கியராசா, கௌரிபாலன், கௌரிநாதன், தவம், சந்தா, காலஞ்சென்ற யோகராசா, ஆறுமுகம், பரமேஸ்வரி மற்றும் ராஜா, ஜெயா, கலா காலஞ்சென்ற விஜயகுமார், உதயகுமார், சறோஜாதேவி ஆகியோரின் பாசமிகு மச்சாளும் ஆவார்.