குருணாகல் – குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மனித வள முகாமைத்துவ அதிகாரி ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இடுப்பில் துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த நிலையிலேயே குறித்த அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சலூன் கடை ஒன்றில் வைத்தே அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் இன்றைய தினம் (14) நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவுள்ளதாக பெலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

