தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகச் செயற்பாடுகள் போன்ற கொடூரமான சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
குறிப்பாக தென் கரையோரமான பெந்தர பிரதேசத்தில் அஹுங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் நிம்மதியாக வாழ விரும்புகின்றனர் என்றும், அவர்கள் இங்கு வந்து துப்பாக்கிச் சூடு சத்தத்தை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்.
இனி அந்த மக்கள் இங்கு வர விரும்பமாட்டார்கள். எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதும் மிகவும் அவசியம் எனவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.