காலி கொஸ்கொடை ஆராண்ய வீதி பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹூங்கமை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞன் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் மற்றும் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் கொஸ்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.