தயாரிப்பு தொழிற்றுறையினை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச வர்த்தகத்தில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கும் விவசாயம் உட்பட உள்நாட்டுக் கைத்தொழில்கள் மற்றும் கருத்திட்டங்களுக்குத் தேவையான ஊக்கிவிப்பு மற்றும் வசதிகளை வழங்குவதற்கு, மூலப்பொருட்கள் இடைநிலைப் பொருட்கள், சில விவசாய அடிப்படைப் பொருட்கள் தவிர்ந்த மூலதனப் பொருட்களுக்கு ஏற்புடைய செஸ் வரியானது 2023 ஜனவரி 01 இலிருந்து மூன்று (03) வருடங்களில் நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு 5 வருட தவணை அடிப்படையில் கட்டம் கட்டமாக இல்லாதாக்கப்படும்.
அதற்கமைய முன் மொழியப்பட்ட வரியினை நீக்குவது கட்டம் கட்டமாக சரி செய்யப்படுவதற்காக 2023 ஜனவரி 01 இலிருந்து தற்போது அறவிடப்படும் சுங்கத் தீர்வை வீதமான 0%, 10% மற்றும் 15% ஆகிய தீர்வை வீதங்களை 0%, 15% மற்றும் 20% ஆக திருத்தம் செய்கின்றேன்.
இதற்கு சமாந்தரமாக வர்த்தக சரிப்படுத்தல் நிகழ்ச்சித்திட்ட (Trade adjustment programs) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.