திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தம்பதியை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம். திருமண மேடையில் மணமகனின் தாயை மணப்பெண் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மணமகன் வீட்டார் மணப்பெண்ணின் வீட்டாரை தாக்கியதால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து , பொலிஸார் இருவரையும் கைது செய்து தனி சிறையில் அடைத்தனர். திருமணம் முடிந்த சில மணிநேரத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.