புதுச்சேரியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி முத்திரப்பாளையத்தை சேர்ந்த அல்போன்ஸ் (25). கார் ஒட்டுநராக பணி புரிந்து வருகிறார்.இவரது வீட்டின் எதிரே உள்ள 19 வயது பெண்னை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
காதலியை தனிப்பட்ட முறையில் பல முறை அழைத்தும்,அவரது வீட்டிற்கே நேரடியாக அடி அடிக்கடி சென்றும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியே பலமுறை அவருடன் தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பெண் திடீரென அல்போன்சிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு, எனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக கூறி, அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அல்போன்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.