சம்மாந்துறையில் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஜனவரி மாதம் 14ம் திகதி சுமார் 8 இலட்சத்திக்கும் மேல் பெறுமதி வாய்ந்த “Bajaj pulsar Ns 200” என்ற வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சைக்கிள் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 16ம் திகதி செய்த முறைப்பாட்டில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார் பைக்கிளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மீட்டதுடன் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.