தற்போது எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் பாகம் – 2 இன் வரவு பற்றி தான் பேச்சு.
பாகம் 1 இன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பாகம் 2 இற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
தற்போது பாகம் 2 வருகின்ற 28ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இத் திரைப்படத்துக்கான புரமோஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவினர் கேரளா, மும்பை, ஆந்திரா போன்ற இடங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
தற்போது நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக பொன்னியின் செல்வன் படக்குழுவினர் திருச்சியில் களம் இறங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.