திருகோணமலை -மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை மலையடி பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று திங்கட்கிழமை (2023.12.04) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.