திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்மெடியாவ தெற்கு பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீட்டினை சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு (15) இடம்பெற்றுள்ளது.
இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீட்டின் ஜன்னல் பகுதியை துவம்சம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பகுதியில் பாதுகாப்பான யானை வேலியின்மை காரணமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
குறித்த சேத விபரம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

