திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொட- பின்னதுவ பகுதியைச் சேர்ந்த மல்நெய்து மானவடுகே சமிந்த பிரியந்த(35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காளி பிரதேசத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக IMULA 2190 என்ற படகின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் பரிசோதனையின் பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
தற்போது இடம்பெற்ற சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்