திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குச்சவெளி நீதிமன்றால் விடுக்கப்பட்ட விசேட அனுமதியினூடாக நேற்று (09) காலை குறித்த பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது.
மேலும் அகழ்வு பணி 10 அடி ஆழம் தோண்டுவதற்கு நீதிமன்றால் வழங்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் ஆயுதப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த அகழ்வு பணியில் குச்சவெளி பிரதேச செயளாலர், குச்சவெளி, திருகோணமலை மற்றும் புல்மோடை விசேட பொலிஸ் பிரிவினர், புடவைக்கட்டு செந்தூர் பிரிவு கிராம உத்தியோகத்தர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் ஆகியோரின் மேற்பார்வையின்கீழ் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.