அகில இலங்கை ரீதியில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த திருகோணமலையை சேர்ந்த சிவபாலசுந்தரம் மயூரன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் யானை தாக்கி பலியானதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையின் இளம் ஆளுமையாய் பல துறைகளிலும் செயல்பாடு மிக்கவனாய் நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த இவர் , அகில இலங்கை ரீதியில் விளையாட்டுத் துறையில் சிவபாலசுந்தரம் மயூரன் சாதனை படைத்தவராவார்.