திருகோணமலை -எத்தாபெந்திவெவ பகுதியில் திருமண வீடொன்றில் இடம் பெற்ற கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (02) 12.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திருமண வீட்டில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு பியர் போத்தலினால் மற்றுமொரு இளைஞர் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் தாயும் மகனும் காயமடைந்துள்ளதுடன் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த மோதல் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.