இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தாம் திருப்தியடையவில்லை என்றும் அச் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார்.
அநுராதபுரத்தில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்